காலாகாலமாக எங்களிடம் இருந்துவந்த கணனி விசைப்பலகை மற்றும் பாரம்பரிய கணனி விளையாட்டுக்குக்கு பயன்படுத்தும் கட்டுப்பாட்டு கருவிகளை துாக்கி ஓரம் போட வேண்டிய காலம் வந்தாகிவிட்டது. ஆம்! நாம் ஒன்று நினைக்க அதனை கணனி அவ்வாறே செய்தால் எப்படி இருக்கும்.? நினைக்கவே வாய் ஈ.... என்று செல்கின்றதல்லவா?

ஆம். நாம் விரும்பியபடி நினைத்ததை செய்யும் ஒரு கணனி மென்பொருள் தற்பொழுது சந்தைக்கு வந்திருக்கின்றது. நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடி நினைக்க கணனி  உங்கள் தேவைக்கேற்றாபோல் இயங்கும். அதுதான் JEDI MASTER MIND இந்த மாஸ்ரா் மயிண்ட் மென்பொருளானது mind techinologies inch. என்கிற ஒரு நிறுவனத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மென்பொருளானது இரு வேறு விதமான பகுதியினரைக் குறிப்பாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று இந்த கணனி விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் மற்றைய பகுதி விசேட தேவைக்குரியோர். அதற்காக அந்நிறுவனம் இரு வேறு விதமான மென்பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்று கணனி விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் பயன்பெறும் வகையில் பிரபலமான விளையாட்டுக்களா, World of warcraft & Call of duty போன்ற கணனி விளையாட்டுகளை விளையாடுவதற்கு உதவும். மற்றையது JEDI MIND MOUSE இது அங்கவீனர்களை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்த Jedi Mind Mouse அங்கவீனர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே குறிப்பிடவேண்டும். கணனி கற்றகவேண்டும் என்று ஆர்வமுடைய அங்கவீனர்கள் மிக மிக இலகுவான முறையில் கணனியை கையாள்வதற்கு இது பேருதவியாக இருக்கும். அது சரி. இதனை எவ்வாறு உபயோகப்படுத்தலாம்? என்ன விலைக்கு வாங்கலாம்? எங்கு வாங்கலாம்?

இந்த மென்பொருட்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு கீழ்க்காணும் இந்த உபகரணம் தேவை. இதன் விலை கிட்டத்தட்ட 300 அமெரிக்க டொலர்கள். இதன் உதவியுடனேயே Master Mind இயங்குகின்றது.

நீங்கள் Master mind மென்பொருளினை அத்தயாரிப்பு நிறுவனத்தின் தளத்திலிருந்து பதிவிறக்கி கொள்ளலாம். வெறும் 99 அமெரிக்க டாலர்களே குறிக்கப்பட்டிருக்கிறது இந்த மென்பொருள். இங்கு உங்களுக்காக அம்மென்பொருளின் செயல்வடிவம் காணொளியாக.