என்ன தான் நாளுக்கு நாள் இணைய பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டாலும் அவற்றை எல்லாம் முறியடிக்கும் வகையில் அப்பப்போ ஒரு சில வைரஸ்கள் வந்து பெரிதான தாக்கத்தினை ஏற்படுத்தி சென்று விடும். அந்த வகையில் தற்போது SophosLabs வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவிவரும் ஒரு போலி anti virus மென்பொருள் ஒன்று கண்டறிப்பட்டுள்ளது.

இம்மென்பொருளானது  உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் ஒரு சாதாரண HTML கோப்பினைபோல் ஒட்டிக்கொண்டு வரும். அதனை நீங்கள் சொடுக்கும் பட்சத்தில் உங்கள் கணனிக்குள் தானாகவே பதிவிறங்கும் அந்த மென்பொருள் உங்கள் கணனியில் உங்களுக்கு தெரியாமலேயே தனது வேலையை காட்டத்தொடங்கி விடும். 

Sophosன் தலைமை தொழில்நுட்ப ஆலோசகர் இது பற்றி கருத்துத்தெரிவிக்கையில், இத்தாக்குதலானது கணனிப்பாவனையாளர்களை ஏமாற்றி அவர்களுடைய கடனட்டைகளை களவாடும் ஒரு பாரிய முயற்சி எனக்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இம்மென்பொருளானது பாவனையாளர் கணனியில் தோன்றி அவர்கள் கணனியில் நிறைய Virus இருப்பதாகவும் அவற்றை அகற்றுவதற்கு பணம் செலுத்துமாறும் கோரி நிற்கும் அவ்வாறு பணம் செலுத்திய பின்னர் மீண்டும் மீண்டும் கணனியில் நிறைய Virus இருப்பதாக கூறி பாவைனையாளரை பணம் செலுத்த ஊக்குவித்துக்கொண்டிருக்கும் என்று அவர் கூறினார். 

இது மாதிரியான போலி Anti virus தாக்குதல் முதன்முறையல்ல. பல நடந்திருக்கின்றன. ஆனால் இந்த மென்பொருளினால் ஏற்படும் சேதம் மிக மிக அதிகம் என வல்லுனர்கள் கருத்துத்தெரிவித்திருக்கிறார்கள். 

இது பற்றி மேலும் கணனிப்பாவனையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்நிறுவனம் ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளது. அது இங்கு உங்களுக்காக