இதுவரை நாளும் பீட்டாவில் இருந்த  Flattr தற்பொழுது பாவனையாளர்களுக்காக பொதுவாக்கப்பட்டுள்ளது. அது சரி அது என்ன Flattr? Flattr என்பது ஒரு Micro payment website. உங்கள் தளத்திலே காணப்படும் ஆக்கத்தினை வரும் விருந்தினர்கள் ரசித்தார்களே ஆனால் Flattr உங்களுக்கு பணம் வழங்கும். ஆம். முழுக்க முழுக்க பதிவர்களையே நோக்காக கொண்டு ஆக்கப்பட்டது இந்த Flattr தளம். சரி இது எவ்வாறு இயங்குகின்றது என்று சற்று நோக்குவோம்.

உங்கள் தளத்திலே Flattr Modules or plugin's நிறுவியிருந்தீர்கள் ஆனால், உங்கள் தளத்திற்கு வரும் விருந்தினர் ஒரு குறிப்பிட்ட பதிவினை மிகவும் ரசித்திருந்தால் அவர் அந்த பதிவின் அருகே காணப்படும் சிறிய சொடுக்கியை சொடுக்குவார். இவ்வாறு உங்கள் பதிவிற்கு கிடைக்கும் அத்தனை Flattr's கணக்கிடப்பட்டு மாத முடிவில் உங்களுக்கு உரிய தொகை வழங்கப்படும். இது நல்லா இருக்கே என்று நீங்கள் சிந்திக்க கூடும். ஆம். நல்லது தான். ஆனால், இச்சேவையை வழங்குவதால் Flattr உங்களுக்கு மாதா மாதம் வருகின்ற பணத்தில் பத்து வீதம் தனக்கு எடுத்துக்கொண்டு மீதியைதான் உங்களுக்கு தரும். ஆனால் இந்த வீதக்கணக்கு flattr பிரபலமடையும் பட்சத்தில் குறைவடையும் என்று நம்பப்படுகின்றது. சரி. இன்னும் ஏன் தாமதம் இன்றே உங்கள் தளத்திற்கும் Flattr சேர்த்து கொஞ்சம் பணம் பண்ணலாமே? 

Flattr போன்றே சேவையே வழங்குகின்ற இரு வலைத்தளங்களையும் இங்கே உங்களுக்காக பட்டியலிட்டுள்ளேன். அவற்றையும் முயற்சித்து பாருங்கள். Kachingle மற்றும் Rewrd