தற்போது நீங்கள் உங்கள் ஜீமெலில் இருந்து போன் கதைக்கலாம். அதுவும் இலவசமாக! ஆம்! தேடுபொறி ஜாம்பவானின் மற்மொரு நகர்வு. அண்மையில் கூகிள் தனது அடுத்த கட்ட நகர்வாகிய கூகிள் வொய்ஸ்னை அறிமுகம் செய்து வைத்தது.  கூகிள் வொய்ஸ் மூலமாக நீங்கள் உங்களுடைய ஜீமெயிலில் இருந்து இலவசமாக அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு அழைப்புக்களை ஏற்படுத்தலாம். இந்த இலவச சேவைக்காலம் இந்த ஆண்டின் இறுதி மட்டும் இருக்கும் என நம்பப்படுகின்றது.  

கூகிள் வொய்ஸின் இச்சேவையானது தற்பொழுது கனடா மற்றும் அமெரிக்காவுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சர்வதேச ரீதியாக பாவனைக்கு விடப்பட உள்ளது.  இதன் சிறப்பம்சங்கள் என்னவெனில், நீங்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்பவராயில் உங்கள் தொலைபேசியினை உங்களுடன் ரோமிங்கில் எடுத்து செல்ல வேண்டிய தேவை இனி இருக்காது. நேரடியாக இணைய இணைப்புள்ள கணியின் ஊடாக உங்கள் அழைப்புக்களை நீங்கள் மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த கூகிள் வொய்ஸ் பற்பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அவையாவன

1. உங்களுக்கு வரும் Voice Mail களை குறுஞ்செய்திகளாக உங்கள் கைப்பேசிக்கு அனுப்பிவைக்கும்.

2.தேவையற்ற அழைப்புக்களை தவிர்க்கும் வசதி

3. இலகுவாக பலரையும் Conference அழைப்பிலே இணைக்கும் வசதி

4. குறுஞ்செய்தியினை மின்னஞ்சலாக அனுப்பும் வசதி

இவ்வாறு இன்னும் நிறைய நிறை வசதிகளுடன் வந்திருக்கின்றது கூகிள் வொய்ஸ். கூகிள் வொய்ஸ் மிக மிக குறைந்த விலையில் சர்வதேச அழைப்புக்களையும் வழங்க இருக்கின்றது. கூகிளின் இந்த வருகையால் ஆடிப்போய் இருக்கின்றன சில முன்னணி VOIP நிறுவனங்கள். ஸ்கைப்பையும் சேர்த்து தான். விரைவில் இந்த சேவை சர்வதேசமயமாக்கப்படும் என்று நம்புவோம்.