மூளைத்தொழில்நுட்பம்
15:10
Posted by Tamil podijan
காலாகாலமாக எங்களிடம் இருந்துவந்த கணனி விசைப்பலகை மற்றும் பாரம்பரிய கணனி விளையாட்டுக்குக்கு பயன்படுத்தும் கட்டுப்பாட்டு கருவிகளை துாக்கி ஓரம் போட வேண்டிய காலம் வந்தாகிவிட்டது. ஆம்! நாம் ஒன்று நினைக்க அதனை கணனி அவ்வாறே செய்தால் எப்படி இருக்கும்.? நினைக்கவே வாய் ஈ.... என்று செல்கின்றதல்லவா?
ஆம். நாம் விரும்பியபடி நினைத்ததை செய்யும் ஒரு கணனி மென்பொருள் தற்பொழுது சந்தைக்கு வந்திருக்கின்றது. நீங்கள் இருந்த இடத்தில் இருந்தபடி நினைக்க கணனி உங்கள் தேவைக்கேற்றாபோல் இயங்கும். அதுதான் JEDI MASTER MIND இந்த மாஸ்ரா் மயிண்ட் மென்பொருளானது mind techinologies inch. என்கிற ஒரு நிறுவனத்தினரால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மென்பொருளானது இரு வேறு விதமான பகுதியினரைக் குறிப்பாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று இந்த கணனி விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் மற்றைய பகுதி விசேட தேவைக்குரியோர். அதற்காக அந்நிறுவனம் இரு வேறு விதமான மென்பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்று கணனி விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் பயன்பெறும் வகையில் பிரபலமான விளையாட்டுக்களா, World of warcraft & Call of duty போன்ற கணனி விளையாட்டுகளை விளையாடுவதற்கு உதவும். மற்றையது JEDI MIND MOUSE இது அங்கவீனர்களை நோக்காக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த Jedi Mind Mouse அங்கவீனர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே குறிப்பிடவேண்டும். கணனி கற்றகவேண்டும் என்று ஆர்வமுடைய அங்கவீனர்கள் மிக மிக இலகுவான முறையில் கணனியை கையாள்வதற்கு இது பேருதவியாக இருக்கும். அது சரி. இதனை எவ்வாறு உபயோகப்படுத்தலாம்? என்ன விலைக்கு வாங்கலாம்? எங்கு வாங்கலாம்?
இந்த மென்பொருட்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு கீழ்க்காணும் இந்த உபகரணம் தேவை. இதன் விலை கிட்டத்தட்ட 300 அமெரிக்க டொலர்கள். இதன் உதவியுடனேயே Master Mind இயங்குகின்றது.
நீங்கள் Master mind மென்பொருளினை அத்தயாரிப்பு நிறுவனத்தின் தளத்திலிருந்து பதிவிறக்கி கொள்ளலாம். வெறும் 99 அமெரிக்க டாலர்களே குறிக்கப்பட்டிருக்கிறது இந்த மென்பொருள். இங்கு உங்களுக்காக அம்மென்பொருளின் செயல்வடிவம் காணொளியாக.
Flattr- ஓர் அறிமுகம்
14:21
Posted by Tamil podijan
இதுவரை நாளும் பீட்டாவில் இருந்த Flattr தற்பொழுது பாவனையாளர்களுக்காக பொதுவாக்கப்பட்டுள்ளது. அது சரி அது என்ன Flattr? Flattr என்பது ஒரு Micro payment website. உங்கள் தளத்திலே காணப்படும் ஆக்கத்தினை வரும் விருந்தினர்கள் ரசித்தார்களே ஆனால் Flattr உங்களுக்கு பணம் வழங்கும். ஆம். முழுக்க முழுக்க பதிவர்களையே நோக்காக கொண்டு ஆக்கப்பட்டது இந்த Flattr தளம். சரி இது எவ்வாறு இயங்குகின்றது என்று சற்று நோக்குவோம்.
உங்கள் தளத்திலே Flattr Modules or plugin's நிறுவியிருந்தீர்கள் ஆனால், உங்கள் தளத்திற்கு வரும் விருந்தினர் ஒரு குறிப்பிட்ட பதிவினை மிகவும் ரசித்திருந்தால் அவர் அந்த பதிவின் அருகே காணப்படும் சிறிய சொடுக்கியை சொடுக்குவார். இவ்வாறு உங்கள் பதிவிற்கு கிடைக்கும் அத்தனை Flattr's கணக்கிடப்பட்டு மாத முடிவில் உங்களுக்கு உரிய தொகை வழங்கப்படும். இது நல்லா இருக்கே என்று நீங்கள் சிந்திக்க கூடும். ஆம். நல்லது தான். ஆனால், இச்சேவையை வழங்குவதால் Flattr உங்களுக்கு மாதா மாதம் வருகின்ற பணத்தில் பத்து வீதம் தனக்கு எடுத்துக்கொண்டு மீதியைதான் உங்களுக்கு தரும். ஆனால் இந்த வீதக்கணக்கு flattr பிரபலமடையும் பட்சத்தில் குறைவடையும் என்று நம்பப்படுகின்றது. சரி. இன்னும் ஏன் தாமதம் இன்றே உங்கள் தளத்திற்கும் Flattr சேர்த்து கொஞ்சம் பணம் பண்ணலாமே?
Flattr போன்றே சேவையே வழங்குகின்ற இரு வலைத்தளங்களையும் இங்கே உங்களுக்காக பட்டியலிட்டுள்ளேன். அவற்றையும் முயற்சித்து பாருங்கள். Kachingle மற்றும் Rewrd
கூகிள் வொய்ஸ்
04:40
Posted by Tamil podijan
தற்போது நீங்கள் உங்கள் ஜீமெலில் இருந்து போன் கதைக்கலாம். அதுவும் இலவசமாக! ஆம்! தேடுபொறி ஜாம்பவானின் மற்மொரு நகர்வு. அண்மையில் கூகிள் தனது அடுத்த கட்ட நகர்வாகிய கூகிள் வொய்ஸ்னை அறிமுகம் செய்து வைத்தது. கூகிள் வொய்ஸ் மூலமாக நீங்கள் உங்களுடைய ஜீமெயிலில் இருந்து இலவசமாக அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு அழைப்புக்களை ஏற்படுத்தலாம். இந்த இலவச சேவைக்காலம் இந்த ஆண்டின் இறுதி மட்டும் இருக்கும் என நம்பப்படுகின்றது.
கூகிள் வொய்ஸின் இச்சேவையானது தற்பொழுது கனடா மற்றும் அமெரிக்காவுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சர்வதேச ரீதியாக பாவனைக்கு விடப்பட உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்னவெனில், நீங்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்பவராயில் உங்கள் தொலைபேசியினை உங்களுடன் ரோமிங்கில் எடுத்து செல்ல வேண்டிய தேவை இனி இருக்காது. நேரடியாக இணைய இணைப்புள்ள கணியின் ஊடாக உங்கள் அழைப்புக்களை நீங்கள் மேற்கொள்ளலாம். அத்துடன் இந்த கூகிள் வொய்ஸ் பற்பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அவையாவன
1. உங்களுக்கு வரும் Voice Mail களை குறுஞ்செய்திகளாக உங்கள் கைப்பேசிக்கு அனுப்பிவைக்கும்.
2.தேவையற்ற அழைப்புக்களை தவிர்க்கும் வசதி
3. இலகுவாக பலரையும் Conference அழைப்பிலே இணைக்கும் வசதி
4. குறுஞ்செய்தியினை மின்னஞ்சலாக அனுப்பும் வசதி
இவ்வாறு இன்னும் நிறைய நிறை வசதிகளுடன் வந்திருக்கின்றது கூகிள் வொய்ஸ். கூகிள் வொய்ஸ் மிக மிக குறைந்த விலையில் சர்வதேச அழைப்புக்களையும் வழங்க இருக்கின்றது. கூகிளின் இந்த வருகையால் ஆடிப்போய் இருக்கின்றன சில முன்னணி VOIP நிறுவனங்கள். ஸ்கைப்பையும் சேர்த்து தான். விரைவில் இந்த சேவை சர்வதேசமயமாக்கப்படும் என்று நம்புவோம்.
போலி Anti Virus
15:38
Posted by Tamil podijan
என்ன தான் நாளுக்கு நாள் இணைய பாதுகாப்புக்கள் அதிகரிக்கப்பட்டாலும் அவற்றை எல்லாம் முறியடிக்கும் வகையில் அப்பப்போ ஒரு சில வைரஸ்கள் வந்து பெரிதான தாக்கத்தினை ஏற்படுத்தி சென்று விடும். அந்த வகையில் தற்போது SophosLabs வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவிவரும் ஒரு போலி anti virus மென்பொருள் ஒன்று கண்டறிப்பட்டுள்ளது.
இம்மென்பொருளானது உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் ஒரு சாதாரண HTML கோப்பினைபோல் ஒட்டிக்கொண்டு வரும். அதனை நீங்கள் சொடுக்கும் பட்சத்தில் உங்கள் கணனிக்குள் தானாகவே பதிவிறங்கும் அந்த மென்பொருள் உங்கள் கணனியில் உங்களுக்கு தெரியாமலேயே தனது வேலையை காட்டத்தொடங்கி விடும்.
Sophosன் தலைமை தொழில்நுட்ப ஆலோசகர் இது பற்றி கருத்துத்தெரிவிக்கையில், இத்தாக்குதலானது கணனிப்பாவனையாளர்களை ஏமாற்றி அவர்களுடைய கடனட்டைகளை களவாடும் ஒரு பாரிய முயற்சி எனக்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இம்மென்பொருளானது பாவனையாளர் கணனியில் தோன்றி அவர்கள் கணனியில் நிறைய Virus இருப்பதாகவும் அவற்றை அகற்றுவதற்கு பணம் செலுத்துமாறும் கோரி நிற்கும் அவ்வாறு பணம் செலுத்திய பின்னர் மீண்டும் மீண்டும் கணனியில் நிறைய Virus இருப்பதாக கூறி பாவைனையாளரை பணம் செலுத்த ஊக்குவித்துக்கொண்டிருக்கும் என்று அவர் கூறினார்.
இது மாதிரியான போலி Anti virus தாக்குதல் முதன்முறையல்ல. பல நடந்திருக்கின்றன. ஆனால் இந்த மென்பொருளினால் ஏற்படும் சேதம் மிக மிக அதிகம் என வல்லுனர்கள் கருத்துத்தெரிவித்திருக்கிறார்கள்.
இது பற்றி மேலும் கணனிப்பாவனையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்நிறுவனம் ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளது. அது இங்கு உங்களுக்காக
Subscribe to:
Posts (Atom)